search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Assembly Election"

    தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசி தெரிவித்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உ.பி.யில் நடைபெற உள்ள தேர்தலை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். காங்கிரஸ், பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.

    இதற்கிடையே அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத்துல் முஸ்லிம் லீக் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியும் உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். உ.பி.யில் 100 இடங்களில் போட்டியிடுகிறது. இதை அந்த கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேச தேர்தலில் நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுகிறோம். தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களால் உ.பி.யில் பல இடங்களை கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு ஓவைசி கூறினார்.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய எஸ்.பி.எஸ்.பி. கட்சியுடன் கூட்டணி அமைக்க ஓவைசி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கட்சி பெற்ற ஓட்டுக்களால் ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதேமாதிரி உ.பி. தேர்தலிலும் அவர் ஓட்டுக்களை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பாக ஏற்கனவே ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இதில் பா.ஜனதா 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மேலும் ஒரு கருத்து கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    டைம்ஸ் நவ்-போல்ஸ்ட் ராட் நடத்திய இந்த கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை பா.ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 119 முதல் 125 இடங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி கடந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 38 இடங்களையே பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ்


    காங்கிரசுக்கு 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


    பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிதான் களத்தில் போராடுகிறது. சமாஜ்வாடியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ அல்ல” என உத்தரபிரதேச மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கூறினார்.
    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அந்த மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அவர் அங்கு அனுப்ஷாகர் என்ற இடத்தில் நேற்று பேசினார்.

    அப்போது அவர், “உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். அதற்கு கட்சி தயாராகி இருக்கிறது. 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும். பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிதான் களத்தில் போராடுகிறது. சமாஜ்வாடியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ அல்ல” என கூறினார்.

    பிரியங்காவின் வாக்குறுதிகள் உத்தரபிரதேச மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை ஓட்டாக மாற்றும் பணிக்காக அவர் உத்தரபிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளது. இதற்காக அங்கு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து தொடங்கி வைத்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா அங்கு முகாமிட்டு தீவிர களப்பணியாற்றி வருகிறார். இந்த முறை ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் நாள்தோறும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

    பிரியங்காவின் வாக்குறுதிகள் உத்தரபிரதேச மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை ஓட்டாக மாற்றும் பணிக்காக அவர் உத்தரபிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அவர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    இந்தநிலையில் பிரியங்கா இன்றும், நாளையும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். புலந்தசரில் இன்று அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் ஆக்ரா, அலிகார், மீரட் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பிரியங்கா இன்று புலந்தசரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். நாளை அவர் மொரதாபாத், சகரன்பூர், பரேலி உள்பட 18 மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறார். இந்த 2 நாள் கலந்துரையாடலில் அவர் கட்சியை பலப்படுத்துவது, வீதி வீதியாக மக்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.
    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் வாக்காளர்களின் மனநிலையை அறிவதற்காக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் நவம்பர் முதல் வாரத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதாவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. அந்த கட்சி 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    2017-ம் ஆண்டு முதல் மிகச்சிறிய அளவிலான 0.7 சதவீத வாக்காளர்கள் இடையே மட்டும் பா.ஜனதா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சரிவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 16 முதல் 20 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சரிவு சமாஜ்வாடி கட்சிக்கு சற்று சாதகமாக அமையும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் தீவிர பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 2.6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை முதல்-மந்திரியாக இருந்தபோது, அகிலேஷ் யாதவ் சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்தது குறிப்பிடத்தக்கது.
    லக்னோ :

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இருப்பினும், இதுதொடர்பான இறுதி முடிவை கட்சி எடுக்கும். ராஷ்டிரீய லோக்தளத்துடன் கூட்டணி இறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு தான் இறுதி செய்யப்பட வேண்டும். ஒவைசி கட்சியுடனோ, திரிணாமுல் காங்கிரசுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை முதல்-மந்திரியாக இருந்தபோது, அகிலேஷ் யாதவ் சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×