என் மலர்

  நீங்கள் தேடியது "Union Environment Ministry"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. #MekedatuDam #KaveriWaterDispute
  புதுடெல்லி:

  பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

  இந்த எதிர்ப்புக்கு மத்தியில் காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்டப்பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.


  இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மேகதாது அணைக்கான ஆய்வுப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #MekedatuDam #KaveriWaterDispute
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். #MullaperiyarDam #EdappadiPalaniswami #Modi
  சென்னை:

  முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

  புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்நிலையில், முல்லைபெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இந்த முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். எனவே, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதியை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.  #MullaperiyarDam #MullaperiyarStudy #EdappadiPalaniswami #Modi
  ×