search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unemployee"

    • உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
    • தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் இந்த ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணத்தை செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Mancommitssuicide
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தின் போஜ்பூரி பகுதியைச் சேர்ந்தவர்  சவுரவ்(30). பீகாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.

    டெல்லியின் அசோக் நகர் பகுதியில் வீடு ஒன்று எடுத்து தங்கி கடந்த 2 மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார்.  எங்கும் வேலை கிடைக்காததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி நேற்று காலை மயூர் விகார் மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து மையூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 9 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவுரவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சவுரவ் உயிரிழந்ததையடுத்து, அவர் தங்கியிருந்த அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அவரது டைரியை கைப்பற்றினர். அதில், வேலை கிடைக்காததால் கடும் விரக்தியில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சவுரவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #Mancommitssuicide

    ×