search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "town panchayath"

    • அவிநாசி வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது.
    • 38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.

    அவினாசி :

    நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பூா் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி சுமாா் 38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. குறிப்பாக கோவை-சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவிநாசிக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் அளவிற்கு வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது. ஆகவே இப்பகுதி வளா்ச்சிக்கு சாதகமாக சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

    • முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் நாகர்கோவில் ஜோசப் சகாயம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சகாய புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது இ.சி.ஜி, ரத்த பரிசோதனைகள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. கவுன்சிலர் முகமது அலீம் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
    • 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

    இந்த வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் 7 வேட்பாளர், காங்கிரஸ், ம.தி.மு.க. சார்பில் தலா ஒரு வேட்பாளளும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.

    9 வார்டுகளில் மொத்த ஓட்டுக்கள் 2,470 பேர் தகுதியான நிலையில் 1,598 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது 65 சதவிகிதம் ஆகும். 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 9 வார்டுகளில் பதிவான வாக்குகள் நாளை ( 1-ந் தேதி ) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கபடும்.

    ×