search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruverkadu Karumariamman Temple"

    • ‘சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம்.
    • தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    சுக முனிவர் அறிந்த சோதிடக் கலை

    துன்பத்தில் உழல்வது மானிடப் பிறப்பு. நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு சுக, துக்கங்கள் நிகழ்கின்றன. பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவும் நமது தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துபவை நவகிரகங்கள். பன்னிரண்டு ராசியிடங்களில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றன அந்த நவகோள்கள்.

    கோள்களின் விளையாட்டு மானிட வாழ்வு. அந்தக் கோள்களுக்கு எப்படிப்பட்டவர்களும் ஆட்பட்டே தீர வேண்டும்.

    'முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்

    பொதிவறு திருவொடு பொலிவ ராயினும்

    மதியின ராயினும் வலியின ராயினும்

    விதியினை யாரே வெல்லும் நீர்மையார்?

    என்று தனது கந்த புராணத்தில் கேட்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

    'சோதிடம் பொய்க்கா தென்று

    சாற்றுவர் பெரியோர்'

    என்பது வில்லிபுத்தூர் ஆழ்வாரின் கூற்று.

    எனவே விதியினை யாராலும் வெல்ல இயலாது. இருப்பினும் விதியின் விளையாட்டை முன்கூட்டியே அறிய முடியுமா?

    இந்தக் கேள்வி முதன்முதலாக சுகமுனிவரின் மனத்திலே எழுந்தது.

    சிவனை எண்ணி ஐந்தெழுத்தை ஓதினார்.

    சிவனார் காட்சி தந்தார்.

    தனது கேள்வியை ஆண்டவனிடம் வைத்தார்.

    'சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம். விதியை வென்றவன் ஒருவன் இருக்கிறான். அவன் என் அன்பு மகன் மார்க்கண்டேயன்! அவனை அடைந்து தெளிவு பெறுவாய்!' என்றார் இறைவன்.

    சிவனுரை ஏற்ற சுக முனிவன் செண்பக காட்டை அடைந்து மார்க்கண்டேயரைப் பணிந்தான்.

    மார்க்கண்டேயர் சொன்னார்: 'சுகமே! விதியை வெல்வது கடினமே! என் அப்பனின் அருளால் அதை வெல்ல முடியும். அதே போல விதியை முன்கூட்டியே அறியவும் வழியுண்டு. நவக்கிரகங்களைப் படைத்து அவைகளைக் கட்டப்படுத்துபவள் ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தி திருவேற்காட்டிலே கருமாரியாகக் கோவில் கொண்டு விளங்குகிறாள். அவளைப் பணிந்து இதற்கொரு வழி காண்போம்' என்றார்.

    இருவரும் வேற்காடு அடைந்தனர்.

    பனைத்தாயை வாழ்த்தி, அகத்தியரைப் பணிந்து, புற்றுருகுற்று கருமாரியைப் போற்றினர்.

    தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    'மகனே! நாடி வந்து நாடியைப் பற்றிக் கேட்கின்றாய்! திருநீற்றைப் பூசி சிவாய நம என்று சொல்லிப் பவுர்ணமி நாளில் ஐம்புலனை அடக்கி காத்த வீரனைப் பணிவாய்! பெரிய நாடி, கலைநாடி, இடை நாடி ஆகிய நாடிகளின் நிலையறிந்து பெருமைமிக்க சோதிடக் கலையை ஓதாது உணர்வாய்' என்று திருவாய் மலர்ந்தருளினாள் தாய்.

    அன்றிலிருந்து கலைகளின் தாயாம் கருமாரியின் வாக்கினால் சோதிடக்கலை இப்பூவுலகில் நிலைபெற்று விளங்குகிறது.

    • குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனை துதித்தனர்.
    • அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    முத்து வீர சுவாமியின் வரலாறு

    காசிமாநகரைத் துளசி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மகப்பேறு இன்றித் துன்புற்றான். காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மையையும் எண்ணி ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்தான்.

    அம்மையப்பன் காட்சி அளித்தார்.

    என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    பிள்ளை வரம் கேட்டான் துளசி.

    அருளி மறைந்தார் ஆண்டவன்.

    துளசி மன்னன் தன் மனையாள் கற்பூரவல்லியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் விசுவநாதரின் அருளால் மகன் பிறந்தான்.

    அரசகுமாரன் பிறந்த நேரத்தைக் கணித்த சோதிடன் சித்திரைப் பருவத்தில் பிறந்த அரசகுமாரனால் நாட்டுக்கு ஆபத்து என்றான்.

    நாட்டின் எல்லையிலுள்ள ஆலமரத்தடியில் குழந்தையைக் கிடத்தினார்கள்.

    கானகத்தில் குழந்தை கதியற்றுக் கிடந்தது.

    இறையருளால் பிறந்த குழந்தையைக் கொஞ்சிட துளசி அரசனுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

    குழந்தை பசியால் அழுதது.

    அன்னை கருமாரி உருமாறி நாகமாக அங்கு வந்தாள். வெயில் படாமல் படமெடுத்துக் குழந்தையைக் காத்தாள். அவ்வழியாகச் சென்ற மாதிகத்தன் என்பவன் இக்காட்சியைக் கண்டான். அவனைக் கண்டதும் பாம்புருக் கொண்ட தாய் மறைந்தாள். குழந்தையை எடுத்து வந்து வளர்த்தான் மாதிகத்தன். 'வீரன்' என்று பெயரும் சூட்டினான்.

    குழந்தை வாலிபனானான்.

    ஒருமுறை சோழ நாட்டுத் தலங்களை தரிசித்த வீரன் பாண்டிய நாடு சென்றான். பாண்டிய நாட்டின் வட பகுதியில் கள்ளர் குலம் வாழ்ந்து வந்தது. அந்தக் கள்ளர் குலத்தோர் பகைவர்களால் அவதிப்பட்டு வந்தனர்.

    குல தெய்வமாகிய துர்க்கையைச் சரிவர வணங்காத காரணத்தினால் அவர்களுக்கு இந்நிலை வந்தது. குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனைத் துதித்தனர்.

    அம்மனின் அருளால் வீரன் அங்கு வந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தான். பகைவர்களை முறியடிக்கப் புறப்பட்டான்.

    கள்ளர்கள் துணையுடன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.

    கள்ளர்களின் அன்பைப் பெற்ற வீரன் சோழ நாட்டில் பொம்மண்ண துரை வாழும் ஊருக்குச் சென்றபோது விதிவசத்தால் இரண்டு பெண்களைக் கண்டான்.

    பரமசிவனின் அருளால் பிறந்த வீரன் உண்மையில் முருகவேளின் அம்சம். வள்ளி, தெய்வானை என்ற இரு மங்கையரை மணந்த அந்த முருகப் பெருமான் ஆலால சுந்தரனாய்க் கமலினி, அநிதையை மணந்தது, புவியில் பிறந்து கந்தனாகிப் பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் மணந்தது எல்லாமே அவனின் தொடர் வரலாறு. அதே வரலாறு மீண்டும் தொடர்ந்தது. இந்தப் பிறவியில் வீரனாகப் பிறந்து வெள்ளையம்மா, பொம்மி என்ற இரு கன்னியரைக் கண்டு காதல் கொண்டான்.

    இந்நிலையில் காதல் வேட்கை மிக அந்த இருவரையும் குதிரையில் வைத்துத் தூக்கிச் சென்றான் வீரன்.

    பொம்மண்ணா கொதித்தான்.

    சமயபுரத்து அன்னை அவன் கனவில் வந்து வீரனின் அம்சத்தை எடுத்துரைத்தாள். எல்லாமே இறைவருளின் விளையாட்டு என்றிருந்து, வீரனுக்கே அந்த இரு நங்கையரையும் மணம் முடித்துத் தந்தான்.

    இதற்குள் கள்ளர் இனத்தில் பூசல் எழுந்தது. இருபிரிவாகப் பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இதை அறிந்த வீரன் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். அது பொறுக்காத சில சூழ்ச்சிக்காரர்கள் வீரன் மீது அடாத பழி சுமத்தினர். விசாரித்து அறியாத கள்ளர் கோமான் வீரனைக் கழுவிலேற்றும்படி உத்தரவிட்டான்.

    வீரன் பொங்கினான். தெய்வாம்சம் வெளிப்பட்டது. முருகவேளின் அம்சம் தன்னை வெளிக்காட்டியது. கழுமரம் தீப்பற்றிக் கொண்டது.

    அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    பெரும் சினமடைந்து ரௌத்காரமாய் நின்ற வீரனைக் கண்டு பாண்டிய நாடே அஞ்சியது. கள்ளர்கள் பயத்தால் மண்டியிட்டுப் பணிந்து பிழை பொறுத்தருளுமாறு வேண்டினர்.

    அங்கிருந்து அகன்ற வீரன் நேரே அன்னை குடிகொண்ட தாய் வீடாகிய வேற்காட்டை அடைந்தான். வேதபுரீசனை வழிபட்டு, பனைத்தாயை பணிந்து சாம்பர் பொய்கையில் நீராடி, புற்றினை வலம் வந்து அன்னை கருமாரியைப் போற்றி நின்றான். அருளுருவான தேவி அரி மீது அமர்ந்து அருட்காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் ஆலயத்திலேயே குடியேறி இன்று வரை அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    காத்த வீரசாமியின் வரலாறு

    ஒருமுறை அன்னை உமாதேவியார் ஆண்டவன் அனைத்து சிவன்களுக்கும் படியளிக்கும் முறையைச் சோதிக்க விரும்பினாள். கல்லுக்குள் உள்ள தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். அதை அறிந்திருந்தும் அன்னை விதிவசத்தால் ஓர் எலும்பை எடுத்து பேழையில் மூடி வைத்தாள். ஒருநாள் கழித்து திறந்து பார்த்தபோது அப்பேழையினுள் எலும்பும், அதனுடன் ஒரு சோற்றுப் பருக்கையும் இருக்கக் கண்டாள். இறைவனின் அருள் உள்ளத்தை எண்ணி பூரித்தாள். இருப்பினும் ஆண்டவனைச் சோதிப்பது பாவமல்லவா?

    அந்தப் பாவம் நீங்கிட கங்கைக் கரையோரம் ஒரு மலர்ச்சோலை அமைத்து இறைவனை எண்ணித் தவம் இயற்றினாள். தவமியற்றும்போது தடை வராமல் காக்க இறைவனை வேண்டி நின்றாள்.

    இறைவனின் விருப்பப்படி அவனது புருவ மத்தியிலிருந்து ஒரு வீரன் தோன்றினான். அவன் அன்னையின் மலர்ச் சோலையைக் காத்து நின்றான். அவன்தான் காத்த வீரன்.

    ஒருமுறை கயிலையைச் சேர்ந்த கன்னியர் எழுவர் ஒரு குளத்தில் நீராடினர். விதிவசத்தால் காத்த வீரன் அந்தக் கன்னியர்களில் இளையாளது ஆடையை மட்டும் கவர்ந்து சென்றான்.

    கயிலை சென்ற கன்னியர் சிவபெருமானிடம் முறையிட்டனர். சினமடைந்த சிவபெருமான் காத்த வீரனைச் சபித்தார். 'சாதாரண மனிதனைப் போல் காமத்திற்கு ஆட்பட்ட நீ ஏழு பிறவியெடுத்து துன்புற்று முடிவில் கழுவில் ஏற்றப்பட்டு என்னிடம் வந்தடைவாய்' என்றார்.

    காத்த வீரன் கதறி அழுதான். அன்னை உமாதேவி மகனுக்குப் பரிந்து வந்தாள்.

    இதனால் சிவபெருமானையே பழித்துப் பேச முற்பட்டாள் சக்தி. சிவனார் கோபம் பொங்கிட வாம பாகத்திலிருந்து நீக்கப்பட்டாள் உமாதேவி.

    தவற்றை உணர்ந்த தாய் காஞ்சிபுரம் வந்து இறைவனுடைய அன்பைப் பெற சிவலிங்க பூஜை செய்து வந்தாள்.

    சிவசாபம் பெற்ற காத்த வீரசாமி ஏழு பிறவியடைந்து இன்னலுற்றான். ஏழாவது பிறவியில் மீண்டும் பாசவினை பற்றிட ஆரியமலை என்ற அரசகுமாரியின் மேல் காதல் கொண்டான்.

    அந்த ஆரியமாலையை அடைய அன்னையை வேண்டினான். அன்னை அவன்முன் தோன்றினாள்.

    'மகனே! அற்ப சுகங்களுக்காக அன்னையைப் பணியாதே! காமத்தைக் கொல். மாயையால் அழிவு நேரும். ஆபத்துக் காலத்தில் நான் கொடுக்கும் சாம்பர் திருநீறு உன்னைக் காக்கட்டும்' என்று திருநீற்றை அளித்தாள்.

    ஆரியமாலையின் மீதுள்ள மோகத்தால் தவித்த காத்தவீரன் பலவித தந்திரங்கள் செய்து அவளது மனத்தில் இடம் பிடித்தான்.

    ரகசியமாக மணமும் செய்து கொண்டான்.

    இதை அறிந்த அரசன் சினமடைந்து காத்த வீரனைப் பிடித்து கழுவிலேற்ற ஆணையிட்டான்.

    சிவபெருமானின் சாபம் இவ்வாறு காத்தவீரனைத் துரத்தியது.

    அன்னையிடம் அடைக்கலம் நாடி ஓடினான் காத்த வீரன். காஞ்சி காமாட்சியை மனத்தில் எண்ணி கழுமரத்தை நோக்கினான். காமத்தை ஆட்சி செய்யும் காமாட்சி அருளால் கழுமரம் தீப்பற்றியது.

    பின்னர் பிறவியின் நோக்கம் உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்ற காத்தவீரன் நேரே வேற்காட்டை அடைந்தான். பாலியில் நீராடினான். ஈசனைப் பணிந்தான். பனைத்தாயைப் போற்றினான். புற்றை வலம் வந்து கருமாரியைத் துதித்தான். அன்னை சூலமேந்தி சிம்ம வாகினியாய்க் காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் அருட்தலத்தில் ஈசான மூலையில் காத்தவீரன் அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    • ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
    • 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பூந்தமல்லி, திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.

    புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டு ஆகம முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

    கொரோனா காலம் என்பதால் நடைபெறவில்லை. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தற்போது பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருக்கோவில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரம், கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.

    சுமார் இரண்டு ஆண்டு காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேக விழா நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் லயன். டி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×