என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvanaikaval temple"

    • ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.
    • எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குவது திருவானைக்காவல்.

    மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

    வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.

    எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

    இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.

    உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.

    அம்பாள் சாந்த சொரூபியானாள்.

    ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.

    எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம்.

    இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.

    மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.

    • லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.
    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    ஆனைக்கா என்னும் அரும்பதி, பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து லிங்கத்தை அப்பு லிங்கம் என்பர்.

    அப்பு என்றால் தண்ணீர்.

    மக்களுக்கு அமுதம் போன்ற தண்ணீரைத் திரட்டி உமாதேவியார் இங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராண வரலாறு கூறுகின்றது.

    தண்ணீரினால் திரட்டி அமைக்கப்பட்டதால் அமுதம் போன்ற தண்ணீரால் அமைக்கப்பட்டதால் இந்த லிங்கத்தை அமுதலிங்கம் என்றும் தலத்தை அமுதீசுவரம் என்றும் அழைத்தனர்.

    லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

    • ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், என்று பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.
    • அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம்

    ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், அமுதலிங்கம் என்றும் பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.

    திருமுழுக்காட்டவோ, ஏனைய அலங்காரங்களைச் செய்து வணங்கவோ, நீர் உருவத்தில் உள்ள திருவுரு உலகத்தார் வழிபட

    வசதிக்குறைவாக இருந்ததால் அழகியதொரு சிவலிங்கம் அமைக்கப்பட்டது.

    அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம், கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப்புனல்

    "ஸ்ரீமத் தீர்த்தம்" எனப் பெயர் பெற்றது.

    தலத்தின் வேறு பெயர்கள்

    திருவானைக்கா என்னும் இத்தலம் திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேசுவரம், ஜம்புவீச்சுரம், வெண்நாவல்வனம்,

    சம்புவனம், ஞானசேத்திரம், ஞானத்தலம், ஞானபூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேசுவரம், நந்திவனம்,

    இபவனம் எனப் பெயர் பெற்றது ஆகும்.

    • அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்று அழைக்கப்படுகிறது.
    • ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.

    சிவலிங்கம் திருமேனி கொண்டு தென்னாட்டில் எழுந்துள்ள திருத்தலங்கள் பலவற்றுள் ஐம்பூதத் தலங்கள் மிகச் சிறந்தவை.

    அவற்றுள் அகிலாண்ட நாயகியாகிய நமது அன்னை, நாம் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ வேண்டும்

    என்று பெருங்கருணையுடன் நீர்த்துளியை சிவலிங்கமாக்கி வழிபட்ட தலம் இது.

    திருவானைக்கா என்று 'யானைக்கு' அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்னும் பொருளில் கஜா ரணியம், இபவனம்,

    தந்திவனம் என்றும் வெண்நாவல் மரத்தின் கீழ் பெருமான் வீற்றிருப்பதால் ஜம்பகேசுவரம், ஜம்பு வீச்சுரம்,

    சம்புவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்றும், யானை புகாதபடி கட்டப்பட்டதால்,

    தந்திபுகா வாயில் என்றும் ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.

    • சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
    • விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

    பிரார்த்தனை

    கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க,

    தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், ஆடி வெள்ளி காலை 5.30 பகல் 01:00 மணி, மாலை 03:00 – இரவு 08.30 மணி.

    வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5- 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும்

    சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

    1. சம்பந்தர்

    ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே

    2. அப்பர்

    துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்

    இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

    எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

    அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

    3. சுந்தரர்

    தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து

    நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே

    ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்

    எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்

    • சாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்மாள் சன்னதி திரும்புவார்.
    • இந்த பூஜையை அம்பாளே நேரில் வந்து செய்வதாக ஐதீகம்.

    அகிலாண்டேஸ்வரி இத்தலத்தல் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.

    எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து

    கையில் தீர்த்தத்துடன் மேள தாளம் முழங்க சிவன் சின்னதிக்கு செல்வார்.

    சாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்மாள் சன்னதி திரும்புவார்.

    இந்த பூஜையை அம்பாளே நேரில் வந்து செய்வதாக ஐதீகம்.

    இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

    இன்றும் உச்சிகாலத்தில் அகிலாண்டேசுவரி கோவில் குருக்கள் அம்மனைபோல் வேடம் தரித்துக்கொண்டு

    சுவாமி கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து விட்டு செல்கின்றார்.

    • அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகாலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.
    • ஆடி வெள்ளியன்று அதிகாலை 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

    திருவிழாக்கள்:

    ஆடி வெள்ளி(ஐந்து வெள்ளிகள்) ஆடித் தெப்பம், நவராத்திரி, தைத்தெப்பம், பங்குனி தேர்த்திருவிழா, பஞ்சப்பிரகார திருவிழா.

    ஆடி வெள்ளி திருவிழா

    சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் 'அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.

    இவளுக்கு ஸ்ரீவித்யா வைதீக முறையில் பூஜை நடக்கிறது. ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.

    எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆடி வெள்ளியன்று அதிகாலை 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

    அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகாலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.

    சிவனிடம் அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

    • இப்பகுதியை ஆண்டமன்னன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தைக் கட்டினான்.
    • அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.

    இப்பகுதியை ஆண்டமன்னன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தைக் கட்டினான்.

    அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை.

    அவன் சிவனை வேண்டினான்.

    சிவன் விபூதிச் சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார்.

    இதை அறிந்த மன்னன் மகிழ்ந்தான்.

    சிவன் கட்டிய மதில் 'திருநீற்றான் திருமதில்' என்றும் பிரகாரம் 'விபூதி பிரகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது.

    • முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
    • ஜம்புகேஸ்வரர் அமைந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது.

    முருகனின் பாதத்தில் அசுரன்

    முருகப் பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக் கரையில் இருக்கிறார்.

    இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார்.

    முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார்.

    முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.

    நவ துளை ஜன்னல்

    ஜம்புகேஸ்வரர் அமைந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது.

    ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.

    பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

    இந்த ஜன்னல் மனிதன் தன் உடலில் உள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

    • இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:
    • இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

    இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:

    1. ஊஞ்சல் மண்டபம்,

    2. நூறு கால் மண்டம்,

    3. வசந்த மண்டம்,

    4. நவராத்திரி மண்டபம்,

    5. சோமஸ்கந்தர் மண்டபம் காணத்தக்கவை

    பஞ்ச பூத தலங்கள் :

    1. நிலம் - காஞ்சிபுரம்,

    2. நீர் -திருவானைக்காவல்,

    3. காற்று-திருக்காளத்தி,

    4. நெருப்பு-திருவண்ணாமலை,

    5. ஆகாயம்-சிதம்பரம்

    பூஜைகள்:

    இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

    • தன்னிகரற்ற பேரழகியான அகலிகையை நினைத்து அவன் மனம் தவித்தது.
    • அகலிகையை எண்ணி கண்ணீர் விடலானான் மனம் ஒருமைப்படாமல் தவம் கை கூடாமல் தவித்தான்.

    கவுதம முனிவன், தன் மனைவியாகிய அகலிகை வேற்றானோடு காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு கல்லாய் மாறிவிடுமாறு சபித்தான்.

    பின்னர் சிறிது நேரத்திற்குள் மனித சஞ்சாரமற்ற பெருகாட்டில் தான் மட்டும் தனியாக வாழப்போகும் பயங்கரத்தை எண்ணி பார்த்தான்.

    தற்செயலாக வழுக்கி விழுந்த துணைவியை நினைத்து நினைத்து ஏங்கினான்.

    தன்னிகரற்ற பேரழகியான அகலிகையை நினைத்து அவன் மனம் தவித்தது.

    அகலிகையை எண்ணி கண்ணீர் விடலானான் மனம் ஒருமைப்படாமல் தவம் கை கூடாமல் தவித்தான்.

    பர்ணசாலையை விட்டுக் கிளம்பிப் பற்பல தலங்களையும் தரிசிக்க யாத்திரை செல்ல புறப்பட்டான்.

    ஊரூராகச் சுற்றிக் கடைசியில் திருவானைக்கா வந்து சேர்ந்தான்.

    வழிபாடு முடித்து மன உருக்கத்தோடு அமைதியும் இன்பமும் வேண்டிப் பிரார்த்தித்தான் கவுதமனின் பக்திப்பெருக்கை உணர்ந்து இறைவன் அவனுக்குக் காட்சி கொடுத்தார்.

    வருங்காலத்தில் அகலிகை ராமனது திருவடிபட மீண்டும் பெண்ணாகி விடுவாள்.

    அதன்பிறகு இருவரும் முன்புபோல இன்பமிக்க இல்லற வாழ்வு நடத்தலாம் எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

    அன்றுதொட்டு வழிபாட்டை மறவாது செய்துவந்து இறுதியில் ஆண்டவனின் கட்டளைப்படி அகலிகையைப் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தான்.

    ×