என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

மனைவி அகலிகையை கல்லாய் போக சாபம் கொடுத்த கவுதமர்
- தன்னிகரற்ற பேரழகியான அகலிகையை நினைத்து அவன் மனம் தவித்தது.
- அகலிகையை எண்ணி கண்ணீர் விடலானான் மனம் ஒருமைப்படாமல் தவம் கை கூடாமல் தவித்தான்.
கவுதம முனிவன், தன் மனைவியாகிய அகலிகை வேற்றானோடு காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு கல்லாய் மாறிவிடுமாறு சபித்தான்.
பின்னர் சிறிது நேரத்திற்குள் மனித சஞ்சாரமற்ற பெருகாட்டில் தான் மட்டும் தனியாக வாழப்போகும் பயங்கரத்தை எண்ணி பார்த்தான்.
தற்செயலாக வழுக்கி விழுந்த துணைவியை நினைத்து நினைத்து ஏங்கினான்.
தன்னிகரற்ற பேரழகியான அகலிகையை நினைத்து அவன் மனம் தவித்தது.
அகலிகையை எண்ணி கண்ணீர் விடலானான் மனம் ஒருமைப்படாமல் தவம் கை கூடாமல் தவித்தான்.
பர்ணசாலையை விட்டுக் கிளம்பிப் பற்பல தலங்களையும் தரிசிக்க யாத்திரை செல்ல புறப்பட்டான்.
ஊரூராகச் சுற்றிக் கடைசியில் திருவானைக்கா வந்து சேர்ந்தான்.
வழிபாடு முடித்து மன உருக்கத்தோடு அமைதியும் இன்பமும் வேண்டிப் பிரார்த்தித்தான் கவுதமனின் பக்திப்பெருக்கை உணர்ந்து இறைவன் அவனுக்குக் காட்சி கொடுத்தார்.
வருங்காலத்தில் அகலிகை ராமனது திருவடிபட மீண்டும் பெண்ணாகி விடுவாள்.
அதன்பிறகு இருவரும் முன்புபோல இன்பமிக்க இல்லற வாழ்வு நடத்தலாம் எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
அன்றுதொட்டு வழிபாட்டை மறவாது செய்துவந்து இறுதியில் ஆண்டவனின் கட்டளைப்படி அகலிகையைப் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தான்.






