என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirudan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.

    ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கத்தில் ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். #VijayAntony #Thirudan
    இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார்.

    இந்தியா - பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார்.



    அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார். #VijayAntony #Thirudan

    ×