search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thevaaram"

    தேவாரம் பகுதியில் கனமழை பெய்ததால் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. #Rain

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேவாரம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

    எனவே காட்டாறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் பெரம்வெட்டிஓடையில் ஆர்ப்பரித்து வந்ததால் பல்வேறு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

    ஓடையில் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் புகுந்தது. சுமார் 100 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்த அரிசி மற்றும் உணவு தானியங்கள் தண்ணீரில் நனைந்தது.

    இதன்காரணமாக அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். தகவல் அறிந்த பேரூராட்சி நிர்வகத்தினர் இன்று காலை விரைந்து சென்று ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பு, மணல்மேடு ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    இதனால் ஓடையில் தண்ணீர் வடிய தொடங்கியது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் கனமழை நீடித்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rain

    போடி, தேவாரம் பகுதியில் மிரட்டி வரும் ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகள் வந்தன. #MagnaElephant

    உத்தமபாளையம்:

    போடி மற்றும் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவு சமயத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    எனவே மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜூலை மாதம் கலீம், மாரியப்பன் 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    இதனை தொடர்ந்து மக்னா யானை கேரளாவில் உள்ள மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் மீண்டும் தேவாரம் வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கியது.

    தற்போது அம்பேத்கார்காலனி, மூணான்டிபட்டி ஆகிய குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

    எனவே மக்னா யானையை பிடிக்க சாக்கலூத்து, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டாப்சிலிப் காப்பகத்திலிருந்து விஜய், வாசிம் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கம்பம் வனஅலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

    கேமிராவில் பதிவாகும் மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் வனப்பகுதிக்கு சென்று மக்னா யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MagnaElephant

    தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை அடிக்கடி நடமாடி வருகிறது. மேலும் இந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் தோட்டத்துக்கு காவல் செய்யும் நபர்களை தாக்கியும் வருகிறது.

    தேவாரம் மலையடிவாரப் பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் கடலை விவசாயம் நடந்து வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள கடலைச்செடிகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வந்தன.

    தேவாரத்தை சேர்ந்த சேகர் (வயது62) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 10 மணி வரை காட்டு பன்றிகளை விரட்டிவிட்டு சேகர் தூங்க சென்று விட்டார். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த சேகரை கட்டிலோடு தூக்கி வீசியது.

    இதில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அதிகாலை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் வன அதிகாரி, போடி டி.எஸ்.பி. பிரபாகரன், மனோகரன், ஆர்.டி.ஓ. ஆகியோர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவாரம் அருகே பணம் தர மறுத்த முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகில் உள்ள அம்மாபட்டி காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் தேவாரம் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (25) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. வடிவேலுவிடம் செலவுக்கு ராஜாபாண்டி பணம் வாங்கி வந்தார்.

    சம்பவத்தன்று தனது செலவுக்கு பணம் தருமாறு வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு தற்போது பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி அரிவாளால் அவரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயம் அடைந்த வடிவேலு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.

    ×