என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft attempt"

    • கோபாலகிருஷ்ணன் வீட்டில் சுபாஷ் என்பவர் திருட முயற்சி செய்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மாவடிபண்ணை மேலத்தெரு சர்ச்தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது74). இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (21) என்பவர் திருட முயற்சி செய்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த கோபாலகிருஷ்ணன், வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கி ருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தார்.

    • திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்க புரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்த மான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கள்ளிகுளம் சங்கர் (வயது 35), கீழ தேவநல்லூர் முருகன் (வயது 35) ஆகியோர் 2 ஆடுகளை கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த வேல் ஆடுகளை திருடி செல்வதை கண்டு கூச்ச லிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சங்கர், முருகனை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    ×