search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telengana jana samithi"

    தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 93 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களிலும் போட்டியிட முடிவாகி உள்ளது. #TelanganaAssemblyElections #Congress #TDP
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகர ராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி, மொத்தமுள்ள் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 93 இடங்களில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 14 இடங்களும், தெலுங்கானா ஜனசமிதி கட்சிக்கு 8 இடங்களும், சிபிஐக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகைகள் விஜயசாந்தி மற்றும் நக்மா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்பட பலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். #TelanganaAssemblyElections #Congress #TDP
    ×