search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Tanjore temple"

  தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டனர். #Tanjoretemple #SriSriRaviShankar
  மதுரை:

  மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.

  தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.

  இது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

  மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.

  இதைத்தொடர்ந்து வெங்கட், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்கள் உடனே அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். #Tanjoretemple #SriSriRaviShankar

  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் தஞ்சை பெரிய கோவில் என மோடி புகழ்ந்து பேசினார். #MannKiBaat #Modi
  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

  ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்பதில் இந்தியாவில் அனைவருக்குமே பெருமிதம் உள்ளது. அதேபோல் வேதகாலம் தொடங்கி இன்று வரை சமஸ்கிருத மொழியும் ஞானத்தை பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வந்திருக்கிறது.  சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அகன்ற மலையை, தனிப் பெரும் கல்லால் ஆன ஒற்றை மலையை பரந்த அற்புதமான கோவிலாக செதுக்கி இருக்கிறார்கள். அது, மராட்டிய மாநிலம் எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோவில்தான்.

  அதேபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் ஒன்று நிறுவப்பட்டது என்று உங்களிடம் யாராவது கூறினால் உங்களுக்கு நம்பிக்கையே பிறக்காது அல்லவா?... ஆனால் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் அந்த அதிசயத்தைக் காணலாம். இந்த கோவிலில்தான் கட்டிடக்கலை, பொறியியல் கலை ஆகியவற்றின் நம்ப முடியாத இணைப்பினைக் காண முடிகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.  #MannKiBaat #Modi #tamilnews 
  ×