search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamizhkadavul"

    • பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.
    • முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

    முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும்,

    தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டு மானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,

    அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து,

    அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.

    முருகன் அருள் பெற அறுபடை வீடுகளுடன் தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடமாகத் திகழும் வடபழனி தலமும் உள்ளது.

    • அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்.
    • அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன்.

    இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன்.

    வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத் தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகா சூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,

    அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவ சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த் தலைவன்,

    வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    • இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
    • விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.

    இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.

    விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்

    சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.

    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும்.

    • பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
    • முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

    முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

    முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.

    பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.

    முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

    • நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.
    • தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர்.

    பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

    அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் ேபசி முடிப்பார்கள்.

    நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல

    காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான்.

    இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும்,

    குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக் கணக்கானவர்கள் ஆண்டுதோறும்

    பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.

    சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    ×