search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை"

    • இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம்,மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் ஜூப்ளி ஹல்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் டி.வி. நாடகங்கில் நடித்து வந்தார். அப்போது பானி தேஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

    திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பானி தேஜா இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.

    இளம்பெண் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
    • சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

    ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்த நிலையில் தற்போது அவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.

     

    உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

     

    இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.

    அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
    • 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது

    ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.

    அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

     

    யார் இந்த மிஹோ நகயாமா?

    ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.

    அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.

    1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

     

    1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார். 

    • அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
    • மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.

    தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.

    காம்போ சடங்கு

    இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

     

    ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

    மார்செலாவுக்கு என்ன ஆனது?

    சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.

    மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

     

    தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    • 15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
    • கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர்.

    கடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஆபத்து நிறைந்தது. பலரும் அதை உணருவதில்லை.

    சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றமாக இருந்தது. யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று விளையாடியதை பார்த்தோம். சீற்றம் அதிகமுள்ள நேரத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் முன்னெச்சரிக்கை இன்றி கடற்கரை பகுதிக்கு செல்வது ஆபத்துதான்.

    இதை உணராமல், கடற்கரை பகுதிக்கு சென்ற நடிகை ஒருவர் அலையில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ரஷிய நாட்டின் பிரபல நடிகை கெமில்லா பெல்யாஸ்டாக்யா. 24 வயதான அவர் தனது காதலனுடன், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலமான கோசியா மியூய் தீவிற்கு சென்றார்.

    யோகா ஆர்வலரான கெமில்லா, கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கண்களை மூடியபடி யோகா செய்தார். அப்போது கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை கரைக்கு வந்து யோகா செய்து கொண்டு இருந்த நடிகை கெமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலைல் சிக்கிய அவர், கடலுக்குள் உயிருக்கு போராடினார்.

    நீண்ட நேரம் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த அவரை மீட்க யாரும் இல்லாததால், கடலில் மூழ்கினார்.

    15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு, வேறு பகுதியில் கெமில்லாவின் உடல் கரை ஒதுங்கியது.

    நடிகை கெமில்லா பாறையில் அமர்ந்து யோகா செய்வதும், அவரை கடல் அலை இழுத்து செல்வதும், கடலில் அவர் தத்தளிப்பதும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    • கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கமிலா தியானம் செய்துள்ளார்.

    தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சச அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    ரஷிய நடிகை ராட்சச அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார்.

    அப்போது திடீரென வந்த ராட்சச அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்த நபர் நடிகையை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சில கி.மீ. தொலைவில் ரஷிய நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.

    அந்த தீவில் கனமழை பெய்து வருவதால், கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கன்னட நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 30. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் நடித்திருந்தார்
    • 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் [89 வயது]. இவர் வயது மூப்பு காரணமாக இன்று [செப்டம்பர் 27]  அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

    2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

     

    • கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கனகா பிரபலமானார்.
    • 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார்.

    மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகினார்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது

    கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே என்று நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி கார் மீது தாங்குதல் நடத்திய மர்ம நபர்

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வைத்து பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை தெற்கு கொல்கத்தாவில் சதர்ன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த பாயல் முகர்ஜியின் கார் அவ்வழியாக வந்த பைக் ஒன்றின் மீது லேசாக இடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பைக் ஓட்டுநர் பாயல் அமர்ந்திருந்த காரை கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதை காருக்குள் இருந்த பாயல் உடனே பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கினார்.

    வெளியே வரும்படி பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். காருக்குள் அமர்ந்திருத்த பாயல் யாராவது உதவிக்கு வரும்படி கூச்சலிட்டபடி இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    தன்னைத் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக அந்த நபர் மீது பாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். பாயல் கண்மூடித்தனமாக காரை ஓடிவந்து தனது பைக் மீது இடித்ததாக அந்த நபரும் பாயல் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
    • சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.

    இந்தி நடிகையான ஹினா கான் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். நோயில் இருந்து விரைவில் மீள்வேன் என்றும், இந்த கஷ்ட நேரத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் வாழ்த்தினர்.

    இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஹினா கான் குணம் அடைய வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறும்போது, "நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைய உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இரு. ஹினாகான் ஒரு போராளி'' என்று கூறியுள்ளார்.


    இதையடுத்து சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை. வாழ்க்கையில் வரும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.

    உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

    நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
    • தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பர் அதுல்யா ரவி.

    இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போனது.

    அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×