search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coutrallam"

    குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது.
    தென்காசி:

     தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந் தேதி நடந்தது. 

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 4 வார்டுகளை கைப்பற்றியது. 

    இதனால் தலைவர், துணைத்தலைவர் பதிவிகளை யார் கைப்பற்றுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மார்ச் 4-ந் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றனர். 

    ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து மார்ச் 26-ந் தேதி மறைமுகத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. தேர்தலுக்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் 2-வது முறையாக மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (25-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற்பகலில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. 

     எனவே நாளை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? தலைவர்,  துணைத்தலைவர் பதவிகளை யார்  கைப்பற்றுவார்கள்? என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    தலைவர், துணைத்தலைவர் தேர்தலை போன்றே குற்றாலம் பேரூராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×