என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா விபத்து"

    • 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    • இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரூர்கேலா:

    ஒடிசா மாநிலம் கந்த்ர்துடா மற்றும் சமர்பிண்டா கிராமத்தை சேர்ந்த பஜனை குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாருதி வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நேற்று இரவு ஒடிசா சுந்தர்கர் பகுதியில் வேன் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில வேனில் பயணம் செய்த பஜனை குழுவை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இது பற்றி அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு அவர்கள் மறியல் நடத்தினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர்.
    புவனேஸ்வர்:

    மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பஸ் சென்றபோது கவிழ்ந்தது.

    இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
    பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.
    மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
     
    இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எங்கள் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

    இறந்தவர்களின் விரைவான பிரேத பரிசோதனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்கள் வீடு திரும்ப உதவுவதற்காக மேற்குவங்க நிர்வாகம் ஒடிசா அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×