search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
    X
    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

    ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலி- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

    பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.
    மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
     
    இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எங்கள் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

    இறந்தவர்களின் விரைவான பிரேத பரிசோதனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்கள் வீடு திரும்ப உதவுவதற்காக மேற்குவங்க நிர்வாகம் ஒடிசா அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×