என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 176796"

    கீழக்கரையில் 460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,   துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தீர்மானமாக இந்துக்கள் மயான கரையில் மின்மயானம் ரூ.1கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் 460 தெரு நாய்கள் பிடிக்க ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டதால் நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். 

    கடந்த முறை ஒரு நாயை பிடிக்க ரூ.350 வழங்கிய நிலையில் தற்போது ரூ.700 வழங்கியதால் கடும் வாக்கு வாதம் நடந்து, பின்னர் தீர்மானம் நிறைவேறியது. 

    மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி. குடிநீர் வழங்குவது குறித்தும், சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமலே பல பணிகளை நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டினர்.  அதைத்தொடர்ந்து மற்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர் மீரான் அலி, மேலாளர் பத்மநாதன், துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    பெரியகுளத்தில் பொதுமக்களை தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம், பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்காக இந்த சாலை வழியாக சென்று வருவார்கள்.

    இதனால் இச்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்வர்.

    இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையை கடந்து வருகின்றனர்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.

    படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×