என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 155046"

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருப்பவர் கார்த்திகேயன் (வயது 45).

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம்லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

    இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உறுதி செய்த போலீசார் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ..80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேனி:

    தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒரிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்து ரூ14,500 பணத்தை கைப்பற்றினர்.

    நேற்று மாலை 6.30 மணிக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு மதுரை மண்டல வருவாய்த்துறை சிறப்பு ஆய்வுக்குழு அலுவலர் அசோக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்தனர். இரவு 9.15 மணி வரை 3 மணி நேரம் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி இயக்குனர் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். சோதனையின் போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என தெரிய வந்தது.

    விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து பினனர் வெளியே அனுப்பினர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பல்வேறு அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தி வருவதால் அடுத்து எந்த அலுவலகத்துக்கு வருவார்களோ என அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

    ×