search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடை"

    கருவலூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட விக்னேஷ்யார்ன் மின்பாதை ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    அவினாசி கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின் வினிேயாகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த நேரத்தில் சேவூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட தண்டுக்காரன் பாளையம் மின்பாதையில் உள்ள தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், வாளியூர், புலிப்பார், கரடிேகாவில், சாலைபாளையம், குமாரபாளையம், ராமியம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், வடுகபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வடுகபாளையம் மின் பாதையில் உள்ள கருக்கங்காட்டு புதூர், நடுவச்சேரி, சிலுவை புரம், ஏ.வி.எஸ்.மகாலட்சுமி நகர், வடுகனூர், அன்னலட்சுமி ரைஸ் மில், வலையபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

    திருப்பூர் துைண மின் நிலையத்துக்குட்பட்ட அனுப்பர்பாளையம் மின்பாதையில் உள்ள அம்மன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், லட்சுமி தியேட்டர் ரோடு, சிறுபூலுவப்பட்டி, ஏ.பி.நகர், ஈ.பி.காலனி, கமிஷனர் அலுவலக பகுதி, அத்திமரத்தோட்டம், சத்யா நகர் ஆகிய பகுதிகளிலும், வேலம்பாளையம் துணை மின் நிலையம் போயம்பாளையம் மின் பாதையில் உள்ள வெங்கமேடு, ஆத்துப்பாளையம், அண்ணாநகர், கங்கா நகர், போயம்பாளையம், குருவாயுரப்பன் நகர், அய்யப்பன் நகர் ஆகிய பகுதிகளிலும், வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வெங்கமேடு மின்பாதையில் உள்ள வெங்கமேடு, மும்மூர்த்தி நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் செங்கப்பள்ளி துணைமின் நிலையத்துக்குட்பட்ட விருமாண்டம்பாளையம் மின்பாதையில் உள்ள கே.சி.பாளையம், வள்ளிபுரம், புதிய வள்ளிபுரம், அணைபதி, ஓட்டவாங்குளம், பசுமை நகர் ஆகிய பகுதிகளிலும் பசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட பூசாரிப்பாளையம் மின்பாதையில் உள்ள பசூர், கம்மாளதொட்டிபாளையம், பாசிக்குட்டை, தொப்பம்பட்டியனூர், பூசாரிபாளையம், கரியர்கவுண்டனூர், பட்டக்காரன்புதூர், கரைபாளையம் புதூர், இடையர்பாளையம், செல்லனூர், ராம் நகர், பூலுவப்பாளையம், ஒட்டர்பாளையம், ஆயிக்கானூர், லக்கியபாளையம் ஆகிய பகுதிகளிலும், கருவலூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட விக்னேஷ்யார்ன் மின்பாதை ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கோவில்பத்து கிராமத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. அந்தப் பகுதிக்கு சரியான முறையில் மின்சாரம் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பலமுறை மின் வாரியத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
    இந்நிலையில் இரவு மின்சாரம் தடை செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசிக்கும்  லட்சுமி (வயது 50) என்ற பெண்ணை தேள் ஒன்று கொட்டியது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தை தீடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் துணைமின் நிலையத்தில் சந்திராபுரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த துணைமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தின் சந்திராபுரம் மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளான சந்திராபுரம் பிரிவு, சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் பாரதிநகர் உயர் மின்பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாரதி நகர் பீடரில் நாளை 24-ந் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திரா நகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், திருப்புரான் தோட்டம் ஆகிய பகுதி–ளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×