என் மலர்

  நீங்கள் தேடியது "Sri Lankan PM"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

  கொழும்பு:

  இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

  ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.

  சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நேற்று விலகினார். எனவே அங்கு புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #RanilWickremesinghe #SriLanka #PrimeMinister #MahindaRajapaksa
  கொழும்பு:

  இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.

  இதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.  இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

  இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் எனவும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 30 பேர் கொண்ட மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவியேற்கிறது.

  முன்னதாக, ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஒரு போதும் நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறி வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவருடன் தொலைபேசியில் பேசிய சிறிசேனா, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.

  தங்கள் தலைவருக்கு (ரனில் விக்ரமசிங்கே) பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அதிபரின் செயலாளர் தெரிவித்தாக, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம் கூறினார். முன்னதாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பதை தொடர்ந்து, அங்கு சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது. #RanilWickremesinghe #SriLanka #PrimeMinister #MahindaRajapaksa
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் பாராளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #RajapaksaResigns
  கொழும்பு:

  இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

  பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.

  இதற்கிடையே அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை விதித்தது. பின்னர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அறிவித்தது. மேலும், பாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தது.

  கோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜபக்சே பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #RajapaksaResigns

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். #RanilWickremesinghe #Modi
  புதுடெல்லி:

  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.  இந்நிலையில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை ரணில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

  தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக செய்தி வெளியான நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RanilWickremesinghe #Modi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். #Congress #RahulGandhi #RanilWickremesinghe
  புதுடெல்லி:

  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.  இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi  #RanilWickremesinghe

  ×