என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Asia"

    • பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்
    • உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.

    தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் செய்தித்தாள் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பிரதிநிதிகள் சமீபத்தில் சீன நகரமான குன்மிங்கில் சந்தித்தனர். இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் புதிய குழுவின் முக்கிய நோக்கம் என்று செய்தித்தாள் கூறியது.

    சார்க் உறுப்பினர்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும்.

    இந்த அமைப்பு நிறுவப்பட்டால், அது இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு பெரும்பாலும் செயல்படாமல் இருந்த சார்க்கை மாற்றும். 2014 முதல் சார்க் உச்சிமாநாடு நடத்தப்படவில்லை.

    2016 உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.

    வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விலகியதால், அந்த உச்சிமாநாடும் ரத்து செய்யப்பட்டது.

    • உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிறந்த ஊழியர்கள் சேவை விருதுக்கு விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று காலத்துக்குப் பிறகு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் தற்போது சகஜ நிலைமைக்கு மீண்டு வந்துள்ளன.

    இந்நிலையில், உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் 2024 அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துக்கணிப்பின் மூலம் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் தீர்மானிக்கப்பட்டன.

    இந்தப் பட்டியலில் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

    இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனத்தின் விமான சேவையான விஸ்தாரா பட்டியலில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், சிறந்த ஊழியர்கள் சேவை விருதுக்கும் விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான சேவை நிறுவனமாகவும் விஸ்தார ஏர்லைன்ஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. #S400missiles
    இஸ்லாமாபாத்:

    நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.

    இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 1998-ல் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகிஸ்தான் வைத்ததுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால் எந்தவகையான ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் வலிமையை அடைவதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த பிராந்தியத்தை சீர்குலைக்கும் எந்தவகையான ஆயுதங்களையும் எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  #S400missiles
    ×