என் மலர்
நீங்கள் தேடியது "ஏடிஜிபி ஜெயராம்"
- ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
- சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்றும், ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
சில உத்தரவுகளை பிறப்பித்து இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதுபோல உள்ளது. எந்தெந்த வழக்குகள் என்பதைக்கூற விரும்பவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது. சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
ஏடிஜிபி ஜெயராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் உஜ்வால் பூயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.
- மனுதாரர் ஜெயராம் 28 ஆண்டுகளாக போலீஸ் உயர் அதிகாரியாக இருப்பவர்.
- 18 ஆண்டுகளாக நீதிபதியாக உள்ளேன். கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் இருப்பதை அறிந்திருக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது ஜெயராம் சார்பில் வக்கீல் ஆதித்யசவுத்திரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் (சிறுவன் கடத்தல்) கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள மனுதாரருக்கு தொடர்பு இல்லை. முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜெயராமுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்டு, 17-ந் தேதி மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டார். இத்துடன் மனுதாரர் கூடுதல் டி.ஜி.பி. பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
உடனே தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மிஷா ரோத்தகி, 'மனுதாரரை கைது செய்யவில்லை. காவல்துறை புலன் விசாரணையில் பங்கேற்றார். விசாரணையில் பங்கேற்க செய்வதில் அக்கறை செலுத்தினோம்' என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், 'மனுதாரர் ஜெயராம் 28 ஆண்டுகளாக போலீஸ் உயர் அதிகாரியாக இருப்பவர். கைது செய்யவில்லை என்றால் ஏன் அவரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்தது?. அதற்கான தேவை என்ன?. இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நம்பிக்கையை குலைக்கிறது' என்றும் கருத்து தெரிவித்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
நீதிபதி மன்மோகன், '18 ஆண்டுகளாக நீதிபதியாக உள்ளேன். இவ்வாறு கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் இருப்பதை அறிந்திருக்கவில்லை' என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'ஜெயராமின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியுமா?, இல்லையா?' என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
- வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜெயராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனுசின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும். இதையடுத்து நேற்று ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜெயராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயராம் மேல்முறையீடு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
- ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
- இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அந்த அதிகாரி கூறியபடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட் டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார்.
இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணை நடைபெறுகிறது.
- திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ்.
- ஏ.டி.ஜி.பி.யை சந்திக்க மகேஸ்வரி உதவி இருக்கிறார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.
மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் கொடைக்கானலில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது. தன்னை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என அறிமுகம் செய்து கொண்டு கருங்காலி மாலைகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனால் பல அதிகாரிகள், வி.ஐ.பி.க்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் புரோக்கராக செயல்படத் தொடங்கினார். இவருக்கும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு ஆலோசனை பெற்று வந்துள்ளார். அதன் பேரிலேயே தேனியைச் சேர்ந்த வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மகேஸ்வரியை அணுகியுள்ளார். தற்போது 17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் மகேஸ்வரி கைது செய்யப்பட்டு திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வருசநாடு அடுத்துள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை வந்து குறிகேட்டு செல்வது வழக்கம். இங்குள்ள பூசாரி கார்மேகத்துக்கு இதன் மூலம் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. கார்மேகத்தின் நெருங்கிய நண்பராக வனராஜ் இருந்துள்ளார்.
இதனால் தனது மகள் கடத்தப்பட்ட விபரம் அறிந்ததும் அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து கார்மேகம் பூசாரியிடம் கேட்டுள்ளார். அதன் பின் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஜெயராமன் மூலம் மீட்க உதவி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது வனராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதனால் கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் திருமணம் செய்த விஜயஸ்ரீ தற்போது நடக்கும் பிரச்சினையை பார்த்து அதிர்ச்சியடைந்து இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் தனது காதலை பெற்றோரிடம் அவர் தெரிவித்தபோது சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறியதும், எப்படியாவது அவரை அழைத்து வர வேண்டும் எனவும் நினைத்துள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டில் விஜயஸ்ரீ மற்றும் அவரது காதல் கணவர் தனுஷ் உறுதியாக உள்ளதால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தனது தந்தை வனராஜ் மூலம்தான் இத்தனை பிரச்சினை உள்ளது என்றும், தங்களை நிம்மதியாக வாழ விடுமாறும் உறவினர்களுக்கு செல்போனில் விஜயஸ்ரீ உருக்கமாக பேசியுள்ளார்.






