என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி
- குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
- வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜெயராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனுசின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும். இதையடுத்து நேற்று ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜெயராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயராம் மேல்முறையீடு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.






