என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தில்ராஜு"

    • தெலுங்கு நடிகரான நித்தின் சமீபத்தில் தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகரான நித்தின் சமீபத்தில் தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி மகக்ளிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சௌரப் சச்தேவா நடித்துள்ளனர். படத்தின் இசையை அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தில்ராஜு தயாரித்தார்.

    சினிமா திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும், வசூலில் ஏமாற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    திரையரங்கிள் கைக்கொடுக்காத இத்திரைப்படம் ஓடிடியில் பார்த்து ஆதரவு கொடுப்பார்கள் என படக்குழு எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    • ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.

    ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்தார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் தில்ராஜு "கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய தவறு. நான் என் தரப்பில் சில அக்ரீமண்டுகளை போட்டிருக்க வேண்டும். அது என் தவறு தான். இதற்கு அடுத்து அப்படி ஒரு படத்தை தயாரிக்க மாட்டேன்" என கூறியிருந்தார்.

    மேலும் " நடிகர் விஜய் பின்பற்றும் விதிகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷ வாய்ப்பாகும். அவருடைய பாலிசி ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பு, 6 மாதம் ஒரு படத்தில் நடிப்பார். மொத்தம் 120 நாட்களில் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும் நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் இங்கு தெலுங்கு திரையுலகில் அது மொத்தம் சிதைந்து கிடக்கிறது." என கூறியுள்ளார்.

    • இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
    • இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

    அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு  ரத்தக்கறை படிந்த கை வாளை ஏந்தியபடி உள்ள காட்சிகள் அமைக்கபட்டுள்ளது.

    இது ஒரு கிராமப்புற ஆக்ஷன் கதைக்களத்துடன் இருக்கும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை, ரவிகிரண் கோலா இயக்குகிறார். இதற்கு முன் ராஜா வாரு ராணி காரு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தில் ராஜு சார்பாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தில் ராஜு தயாரிக்கும் 59 படமாகும்.

     

    தில் ராஜூவுடன் விஜய் தேவரகொண்டா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×