என் மலர்
சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர்கள் விஜயை பார்த்து கத்துக்கணும் - வேதனையில் குமுறும் தில்ராஜு
- ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
- இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.
ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்தார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் தில்ராஜு "கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய தவறு. நான் என் தரப்பில் சில அக்ரீமண்டுகளை போட்டிருக்க வேண்டும். அது என் தவறு தான். இதற்கு அடுத்து அப்படி ஒரு படத்தை தயாரிக்க மாட்டேன்" என கூறியிருந்தார்.
மேலும் " நடிகர் விஜய் பின்பற்றும் விதிகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷ வாய்ப்பாகும். அவருடைய பாலிசி ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பு, 6 மாதம் ஒரு படத்தில் நடிப்பார். மொத்தம் 120 நாட்களில் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும் நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் இங்கு தெலுங்கு திரையுலகில் அது மொத்தம் சிதைந்து கிடக்கிறது." என கூறியுள்ளார்.