என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக மின்சார வாரியம்"
- தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது.
சென்னை:
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி வருகின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து கணக்கீடு செய்யாததால் 500 யூனிட்டுக்கு கீழே பயன்பாடு உள்ளவர்களுக்கு அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் மின்சார கட்டணம் உயர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும்போதும், அதை நடைமுறைப்படுத்தும்போதும், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அதேநேரம், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகையும் தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் உயரவில்லை.
ஆனால் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் காலங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு முறையாக எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
- பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது.
குடிநீர் விநியோகம், தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 19 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.
பின்பு மின்னகத்தை ஆய்வு செய்த தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 4000 மெகா வாட் மின் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது
கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்திற்கு அணுகி சீரான மின்சாரம் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.
விழுப்புரம், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.
- சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராக வன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ.கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோவில் தெரு.
கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.
வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






