என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்காயங்கள்"

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது.
    • சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும்.

    வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும் பொழுது, அல்லது ஆண்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். வீடுகளில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் காரணமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் தீக்காயங்கள் ஏற்படும் போது எப்படிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடுபட்டுக்கொள்வது வழக்கம். அத்துடன் தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள், துணி இஸ்திரி செய்யும் அயர்ன் பாக்ஸ், எதிர்பாராத மின்சார தாக்குதல், ஆடைகள் மற்றும் பிற பொருள்களில் தற்செயலாக தீப்பிடிப்பது ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் தீ விபத்து காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம்.

    • தீப்புண்கள் ஏற்பட்டு விட்டால் அதன் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



    • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. அத்துடன் தீ புண்களை வெறும் கைகளால் தொடுவது துணி வைத்து துடைப்பது ஆகியவையும் கூடாது.

    • தற்போது பாலிஸ்டர் மற்றும் சிந்தடிக் ஆடை வகைகள் பயன்படுத்தப்படுவதால் தீக்காயங்களின் போது அவை உருகி தோலோடு ஒட்டிக் கொள்வது வழக்கம். அந்த நிலையில் அவ்வாறு தோலில் ஒட்டிக்கொண்ட துணிகளை தாங்களாகவே அகற்ற முயற்சிக்கக் கூடாது.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை தீக்காயம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபரணங்களை அகற்றி விடுவது நல்லது. சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் பாதுகாப்பாக சுத்தமான பருத்தித் துணியால் தீக்காயத்தின் மீது படாமல் மூடி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

    சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும். அப்போது தீக்காயம் பட்டிருந்தால் குளிர்ந்த நீரை தீக்காயம் பட்ட பகுதியில் மீது ஊற்றி அந்த வெப்பம் தோலை பாதிக்காத வகையில் தடுக்கலாம்.

    முகம் மற்றும் கண் பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது மிக முக்கியம்.

    பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. சுய மருத்துவம் செய்வது என்பது கூடாது.

    • திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது.
    • கிரையோஜெனிக் தீக்காயங்களை ஏற்படுத்தும்.

    திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது. இது உடம்பில் ஏதாவது இடத்தில் பட்டால் உறைபனி அல்லது தீக்காயங்களை ஏற்படுத்தும். இந்த திரவ நைட்ரஜன் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பொருட்கள் உறைவதுக்கு பயன்படுத்துவது.

    நைட்ரஜன் ஆக்ஸைடு என்றால் என்ன? அதன் விளைவுகள்

    இந்த திரவ நைட்ரஜன் என்பது மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் ஆகும். இது ஒரு நிறமற்ற, வாசனையற்ற திரவ நிலையில் உள்ள நைட்ரஜன் திரவம் ஆகும்.

    இதன் டெம்பரேச்சர் மைனஸ் 190 டிகிரி செல்சியஸ். இதனுடைய முக்கியமான பயன்பாடு என்னவென்றால் ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளை படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் பதப்படுத்தி பாதுகாக்க முடியும். திரவ நிலையில் இருந்து வாயுவாக வெளிவரக்கூடியது. இது திரவ நிலையில் இருது வாயுவாக மாறும்போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    அதே நைட்ரஜன் வாயுக்கள் நம் உடலுக்குள் செல்லும் போது கடும் உடல் உபாதைகளை உண்டுபண்ணுகிறது. வயிற்றுவலி, மூச்சுத்திணறல் மற்றும் மரணம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த திரவ நைட்ரஜன் இன்ஸ்டண்ட்டாக எந்த பொருளையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் திரவ நைட்ரஜன் ஆவியாகும் போது காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கக்கூடியது. இதனால் தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    ஒரு லிட்டர் திரவ நைட்ரஜன் 700 லிட்டர் கியாஸ் வாயுவை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் திரவ நைட்ரஜனில் இருந்து வரும் நீராவி உடல் உள்ளுறுப்புகளுக்குள் சென்று திசுக்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடல் உறுப்புகளில் துளையை கூட ஏற்படுத்தக் கூடும். அந்த அளவிற்கு குளிர்ந்த உறைபனி தன்மையை உருவாக்கக் கூடியது.

    பெரும்பாலும் உணவுத்துறையில் ஐஸ்கிரீம் துறையில் மட்டுமே இந்த நைட்ரஜனை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒரு கேளிக்கையாக திரவ நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ ஸ்நாக் என்ற பேரில் கேக், பிஸ்கெட், சாக்லேட் ஆகிய உணவுப்பொருட்களில் இதனை ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஆபத்து தெரியாமலேயே மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த திரவ நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் போது அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தி மரணத்தை கொடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    உணவுவகைகளில் இந்த நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ பிஸ்கெட், நைட்ரோ கார்ன் போன்றவைகளில் பயன்படுத்துகின்றனர்.

     நிறைய பேர் இந்த திரவ நைட்ரஜனை ஒரு கொண்டாட்டத்தின் பேரில் கேளிக்கையாக சென்று சாப்பிட்டு வருகின்றனர். அப்படியே உணவினை சாப்பிடும் போது நைட்ரஜன் வாயு முழுவதும் உணவில் இருந்து வெளியேறிய பிறகு சாப்பிட்டால் ஆபத்து எதுவும் இல்லை.

    ஆனால் இந்த திரவ நைட்ரஜனை உணவில் கலந்து சாப்பிடும் போது அந்த வாயுக்கள் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறுவதை நாம் பார்த்திருப்போம். இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இந்த வாயுக்கள் நம் உடலில் எங்கெல்லாம் படுகிறதோ அந்த உறுப்புகள் எல்லாம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதனால் உறுப்புகள் சேதம் அடையும்.

    இந்த திரவ நைட்ரஜன் ஒரு துளி கண்களில் படும்போது கண்பார்வையை இழந்துவிடும் அபாயம் உண்டு. இதனால் நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு என்னவென்றால் எந்த அளவுக்கு நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடலின் உள் உறுப்புகளில் பாதிப்புகள் இருக்கும்.

    இந்த திரவ நைட்ரஜன் உணவுகளில் இவ்வளவு தீங்குகள் இருக்கிறது என்பதை அறியாமலேயே மக்கள் அதனை ஒரு கேளிக்கை பொருளாக நினைத்து சாப்பிட்டு வருகின்றனர். இனியாவது இந்த மாதிரி உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

    ×