என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்ற மதுரை கிளை"

    • தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
    • கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விசாரணையின்போது," சொந்த கட்சி தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜயை பார்க்க கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

    வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்...தாமதமாக வந்தது குற்றமா?

    போலீஸ் மீது பழி போவில்லை. குற்றம்தான் சுமத்துகிறோம். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    கூட்டம் குறித்து உளவுத்துறை கணித்திருக்க வேண்டாமா?"என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம் செய்யப்பட்டது. 

    • ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
    • தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

    உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.

    உரிமம் நிறுத்தி வைப்பு மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மதுரை அமர்வில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஏர்.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறு பரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ×