என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிசூலம்"

    • சிவபெருமானின் படைக்கலங்களில் முதன்மையானது, திரிசூலம்.
    • அத்தி, கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.

    இந்து கடவுள்கள் ஒவ்வொருவரும் தங்கள் "கைகளில் ஒவ்வொருவிதமான ஆயுதங்கள் தாங்கி காட்சி தருவார்கள். இந்த ஆயுதங்கள், தீமையில் இருந்து பக்தர்களை காக்கின்றன. இவற்றில் சிவபெருமானின் படைக்கலங்களில் முதன்மையானது, திரிசூலம். பலர், திரிசூலத்தை சிவபெருமானின் அம்சமாக கருதியும் வழிபடுகிறார்கள்.

    திரிசூலத்தின் தலைப்பகுதி கூர்மையான மூன்று பகுதிகளை கொண்டது. இதனால் தான் 'திரிசூலம்', 'முத்தலைச் சூலம்' என்று அழைக்கப்படுகிறது. திரிசூலம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களை அழித்து மோட்சம் தருகிறது. திரிசூலத்தை ஏந்தி நிற்பதால் சிவபெருமான், 'சூல பாணி' என்றும், 'சூலதரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    திரிசூலத்தின் மூன்று முனைகளும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கின்றது. திரிசூலம் அஸ்திரங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பதால் 'அஸ்திர ராஜன்' என்றும் அழைக்கப்படுகிறது.

    காசி நகருக்கு 'அவிமுத்தம்' என்றும் பெயர் உண்டு. இதற்கு 'அழிவற்றது' என்று பொருள். இந்தத் தலத்தை திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பொன்னால் திரிசூலம் செய்து, அதைச் சுற்றி எட்டு ஆயுதங்களை நிலைப்படுத்தி, அஸ்திர பூஜை செய்வர். அத்தி, கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.

    பராசக்தி, காளி, பைரவர் ஆகிய தெய்வங்களின் கைகளிலும் திரிசூலம் காணப்படுகிறது. கிராம காவல் தெய்வமான பிடாரி ஆலயங்களிலும் திரிசூலமே படைக்கலமாக உள்ளது. பகையை வென்று சுகமாக வாழவும், ஞானம் பெற்று சிறப்புடன் விளங்கவும் திரிசூலத்தையே சிவபெருமானாக நினைத்து வழிபடுகிறார்கள். திரிசூலத்தை சந்திரசேகரர் திருவுருவத்தில் சாற்றி வழிபடுவது சிறந்த பலன் தரும்.

    • கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.
    • இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்துள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

    அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.

    7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன.

    இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்தித்து காட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×