என் மலர்
நீங்கள் தேடியது "கறுப்பு கொடி போராட்டம்"
- அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலைக்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடை பெற்று வருகிறது. இதில் சக்தி ரோடு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வரை 2 இடத்தில் மட்டுமே சாலையை கடக்கும் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி தியேட்டர் சாலையில் திரும்புவதற்கான வழி இல்லை.
இதனால் வாகனங்கள் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்ப டுவதாக கூறி வீரப்பன்சத்திரம் அனைத்து வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாரதி திரையரங்கு சாலை சந்திப்பில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 5-ந் தேதி கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் பகுதி வியாபாரிகள் கூறியதா வது:-
சாலை தடுப்பு வைத்துள்ளதால் தற்போது இருசக்கர வாகனங்கள் ஒரு வழிபாதையில் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உயிரிழ ப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை தடுப்பால் வியா பாரம் முற்றிலும் பாதிக்கப்ப டுகிறது.
மற்ற சாலைகளில் பல இடங்களில் சாலைகளில் இடைவெளி இருந்தும் இந்த சாலையில் மட்டும் தடுப்புகளை அகற்ற பிடிவாதம் பிடிப்பதன் காரணம் புரியவில்லை.
இதனால் வியாபாரி களையும், பொது மக்களையும் பாதுகாக்க இந்த பகுதியில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா.
- சுவாமி சகஜானந்தா திருவுருவச் சிலைக்கு கவர்னர் மலரஞ்சலி.
சிதம்பரம்:
சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினை விடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்சர்ரி, காங்கிரஸ் கட்சி மக்கின், ஜெமினிராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.






