என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய நோட்டுகள்"

    • 5 சாக்கு மூட்டைகளில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது.
    • சில கட்டுக்களில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மட்டும் ரூபாய் நோட்டுகளும், இடையில் வெறும் காகிதங்களும் இருந்தன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு ஏராளமான சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஏராளமான காகிதங்களும் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் திறந்து பார்த்தனர்.

    இதில் 5 சாக்கு மூட்டைகளில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. இதுபோல ஏராளமான போலி ரூபாய் நோட்டுக்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    சில கட்டுக்களில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மட்டும் ரூபாய் நோட்டுகளும், இடையில் வெறும் காகிதங்களும் இருந்தன.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் சாக்கு மூட்டைகளில் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அடைத்து வைத்தது யார்? எதற்காக நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32), பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் சேலம் வீராணம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடி சாபீரும் கஞ்சா விற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சாபீர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் எண்ணிய போது 1000 ரூபாய் நோட்டுகள் 7400-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5000-ம் என 99 லட்சம் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பணத்தை மாற்றி தருமாறு கூறி தன்னிடம் கொடுத்தார். ஆனால் அதனை மாற்ற முடியாத நிலையில் பணம் கொடுத்தவர் இறந்து விட்டார்.

    இதனால் அந்த பணத்தை தனது வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சாபீரை கைது செய்த போலீசார் 99 லட்சம் மதிப்பிலான அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×