என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோன் ஆப்"

    • காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடங்கி வைத்தார்.

    இதில் கடலூர் டவுன் ஹால் எதிரில் விழிப்புணர்வு பதாகைகளை போலீசார் ஆட்டோவின் பின்னால் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம், ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம், லோன் ஆப்பில் லோன் வாங்க வேண்டாம், ஆன்லைன் பார்ட் டைம் ஜாபில் நுழைய வேண்டாம், முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் வாயிலாக தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்யும் நோக்கில் பேசினால் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மேலும் இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கும்பல் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர்.

    நேற்று விஜயவாடா மாவட்டம் பிரசாதம் பாடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டா (வயது 33) என்பவர் லோன் ஆப் கும்பல் மிரட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 207 லோன் ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன அவற்றில் 173 ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது. லோன் ஆப்பில் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்ய வேண்டாம் தைரியமாக வந்து புகார் அளியுங்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்.

    • லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவதால் லோன் ஆப்-களை தடை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா லட்சுமி (30). தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் ராஜ மகேந்திர வரத்திற்கு குடியேறினார்.

    துர்கா ராவ் லோன் ஆப் மூலம் ரூ.30,000 கடன் வாங்கினார். வாங்கிய கடனில் பாதியை திருப்பி செலுத்தி உள்ளார். மீதி பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

    துர்கா ராவ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட லோன் ஆப் கும்பல் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் உனது மனைவியின் படத்தை நிர்வாணமாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் துர்காராவ், ரம்யாலட்சுமி கிழக்கு கோதாவரி மொகல் தூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் தங்களது பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    தனது சகோதரியின் கணவர் ராஜேஷுக்கு போன் செய்த ரம்யா லட்சுமி தங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் தம்பதி தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர் ஆந்திராவில் இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவதால் லோன் ஆப்-களை தடை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    ×