என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட லாட்டரி"

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை துபால் அகமது தெருவை சேர்ந்தவர் உஸ்மான் செரீப் (வயது 43), லாட்டரி வியாபாரி. இவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அப்போது அவரிடம் போலீசார் இனிமேல் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வாங்கினர். ஆனால் லாட்டரி வியாபாரி உஸ்மான் செரீப், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் துணை கமிஷனரும், மாநகர நிர்வாக செயல்துறை நடுவருமான லாவண்யா முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஒரு ஆண்டு வரை ஜாமீனில் வெளியே வராத வகையில் மத்திய சிறையில் அடைக்க மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் லாவண்யா உத்தரவிட்டார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்ற நபர் கைது செய்யப்பட்டனர்.
    • நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்றார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38) இவர் நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள்விற்றார். அப்போது அந்த வழி யாக ரோந்து சென்ற திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நாகராஜன் தலை மை யிலான போலீசார் ஏழு மலையை கைது செய்தனர். மேலும் அவரிட மிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மோட்டார் சைக்கிள்போ ன்ற வற்றை பறிமுதல் செய்தனர்.

    ×