என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில்   லாட்டரி வியாபாரிக்கு ஒரு ஆண்டு ஜெயில்
    X

    சேலத்தில் லாட்டரி வியாபாரிக்கு ஒரு ஆண்டு ஜெயில்

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை துபால் அகமது தெருவை சேர்ந்தவர் உஸ்மான் செரீப் (வயது 43), லாட்டரி வியாபாரி. இவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அப்போது அவரிடம் போலீசார் இனிமேல் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வாங்கினர். ஆனால் லாட்டரி வியாபாரி உஸ்மான் செரீப், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் துணை கமிஷனரும், மாநகர நிர்வாக செயல்துறை நடுவருமான லாவண்யா முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஒரு ஆண்டு வரை ஜாமீனில் வெளியே வராத வகையில் மத்திய சிறையில் அடைக்க மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் லாவண்யா உத்தரவிட்டார்.

    Next Story
    ×