என் மலர்
நீங்கள் தேடியது "டெல்டா பகுதிகளில்"
- வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
- ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் பருவ மழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.
பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க. அரசு அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான்.
ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.
உடனடியாக, வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- காவிரி டெல்டா பகுதிகளில் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தல்
- மாநகர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழுவில் தீர்மானம்
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஒண்டிமுத்து வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் கூட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் யசோதன், மறைந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தீர்மானங்கள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் எடுத்து கூறினார். கூட்டத்தில் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து திருச்சிக்கு கொண்டு வந்து விற்கப்படும் போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்கும் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சி 200 சதவீதம் சொத்து வரி உயர்த்தியதை கைவிட வேண்டும். ஆலம்பட்டி அருகில் உள்ள டி.என்.பி.எல். கம்பெனியின் ரசாயன கழிவுகளால் பொது மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதால் அதனை தடுக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும்
திருச்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நவோதயா பள்ளிகளை உடனடியாக கொண்டு வர வலியுறுத்துவது. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படக்கூடிய பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனை இலவசமாக மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவெறும்பூர் பர்மா காலனி முதல் அண்ணா நகர் காவிரி நகர் இணைக்கும் சாலை பழுதடைந்துள்ளதால் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளில் மணல் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் துவாக்குடி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத மாநகர வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவதுடன் குண்டும் குழியும் உள்ள சாலைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மணங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கெளதம் நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, தரவுதள மேலாண்மை குழு மாவட்ட தலைவர் தர்மராஜ், அரியலூர் மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், ஊடக பிரிவு தலைவர் இந்திரன், விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல், முத்தையன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் நகர மன்ற தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.






