என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி"
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.
இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி,
பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாத்தூர்:
சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரும் உறவினர் வேல்ராஜ் (21) என்பவரும் நள்ளி அருகே சிங்கமுடையார் கோவிலுக்கு சென்று விட்டு சாத்தூர்-கோவில்பட்டி 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
வள்ளிமில் அருகே எதிர்திசையில் சென்று கொண்டிருந்த போது அம்பையிலிருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.
அப்போது கோவில்பட்டியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு அந்த வழியாக வந்த பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடனடியாக காரைநிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டார்.
அமைச்சருடன் பாதுகாப்பு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து சாத்தூர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
காயம் அடைந்த வேல்ராஜூக்கு ஆறுதல் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






