என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவுரா"

    மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் 12 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. #mumbai #trainderailed
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக ஹவுரா செல்லும் ரெயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இன்று அதிகாலை இகாத்பூர் ரெயில் நிலையத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.

    இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் செல்ல இருந்த 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 ரெயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வழித்தடத்தை சரிசெய்யும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ரெயில்பாதை சரி செய்யப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #mumbai #trainderailed
    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. #TMCleaderkilled
    ஹவுரா:

    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பாக்னன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மோஷின் கான். ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பூத் அளவிலான செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியபோது, ஹதூரியா கிராமத்தில் மர்மநபர்கள் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த முகமது மோஷின் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். மோஷின் கானை சுட்டுக்கொன்ற நபர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுட்டுக் கொல்லப்பட்ட மோஷின் கானின் மனைவி, கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #TMCleaderkilled
    ×