என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம் உத்தரவு"

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

    ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.



    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ImportedSand #SupremeCourt
    புதுடெல்லி:

    மலேசியாவில் இருந்து ராமையா நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் சென்று விற்க தமிழக அரசு தடை விதித்தது. தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்து செய்தது.



    இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மணல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டன்னுக்கு 2050 ரூபாய் வழங்க தமிழக அரசு தெரிவித்தது.

    இது தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என்று அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஒரு டன்னுக்கு 2050 ரூபாய் வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை (ரூ.11.27 கோடி) ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #ImportedSand #SupremeCourt
    ×