என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஐடி விசாரணை"

    • கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.

    சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர். #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges

    ×