என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி-பஸ் மோதல்"

    லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா மேலுமலை முதல் கோபசந்திரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் முதல் இடம் பிடிக்கும் விபத்து பகுதியாக இந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் விபத்து நடக்காத நாட்களே இல்லை.

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் இன்று காலை 6.30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னால் சென்ற லாரி மீது இந்த பஸ் மோதி விட்டது. இந்த விபத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் அசோக்குமார் (வயது42), மூர்த்தி (38) மற்றும் பயணிகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட லாரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. லாரிகளை தாறுமாறாக ஓட்டிவரும் டிரைவர்கள் திடீரென்று பிரேக் போடுவதால பின்னால் வரும் வாகனங்கள் லாரி மீது மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. 

    மேலும் ரோட்டின் ஓரத்திலும் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி இருப்பதாலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. லாரி ஓட்டும் டிரைவர்கள் செல்போனில் படம் பார்த்து கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் செல்வதால் பின்னால் எந்த வாகனங்கள் வருகிறது என்பதை கவனிக்காமல் ஓட்டிச் செல்வதும் விபத்துக்கு காரணமாகிறது.
    ஆம்பூர் அருகே இன்று அதிகாலை லாரி-பஸ் மோதிய விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து நேற்றிரவு அரசு பஸ் 40 பயணிகளுடன் தருமபுரிக்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளக்குட்டை பகுயை சேர்ந்த கெங்காதரன் (வயது 35) டிரைவர் ஓட்டிச் சென்றார்.ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.

    விபத்தில் பஸ் டிரைவர் கெங்காதரன். கண்டக்டர் சந்திர சேகர். பயணிகள் ராமசாமி (55). மாதையன் (44). கோவிந்தராஜன் ( 40). காவேரி (65). சிவகாமி (37). தங்கராஜ் (50). வெண்ணிலா (20). காந்தி (30). புஷ்பா (50). கவிதா (45). பிடல்கோஸ் (32). சந்திரா (50). உள்பட 26 பேர் கடுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆம்பூர் அருகே மினி லாரி மீது அரசு பஸ் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு வந்தது.

    ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் சென்னை பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது அரசு பஸ் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த வாணியம்பாடியை சேர்ந்த அமுதா (வயது 42). கிருஷ்ணவேணி (67). இர்பால் (28). ஊத்தங்கரையை சேர்ந்த திருமால் (40). திருப்பத்தூரை சேர்ந்த சாமுண்டிஸ்வரி (48). சென்னையை சேர்ந்த பாஷா (22). காட்பாடியை சேர்ந்த பாலாகிருஷ்ணன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×