என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருதலைக் காதல்"

    • மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
    • திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.

    ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.

    அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.

    இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.

    அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss
    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண், காதலிக்க மறுத்ததால் அதே துணிக்கடையில் முன்பு பணியாற்றிய ரவீந்திரன் என்பவரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் இத்தகைய வெறிச்செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மெர்சியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை காதில் வாங்க அ.தி.மு.க. அரசு மறுக்கிறது.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு பெண்கள் செல்லும் வழியில் கூடிநின்று, அருவருக்கத் தக்க வகையிலான செய்கைகளை செய்தல், பஸ்களில் தொல்லை கொடுத்தல் என்று பெண்களுக்கு எதிராக, பெண்களை மதிக்கத்தெரியாத கும்பல் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இது பெண்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் ஆபத்தாகும்.

    எனவே, ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் கடுமையாகச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதேபோன்று, பெண்களுக்கு எதிரான சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபடும் கும்பல்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
    ×