என் மலர்
நீங்கள் தேடியது "மரபணு"
- 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.
- ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் Super Race மனித இனத்தை எப்ஸ்டீன் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்' மூலம் தெரியவந்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள தனது 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில், ஒரே நேரத்தில் 20 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது விந்தணு மூலம் கருத்தரிக்கச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.
மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கர்ப்பத்திலேயே அசாதாரண ஆற்றல்களையும் அறிவுத்திறனையும் வழங்கி தனது மரபணுக்களைக் கொண்ட ஒரு Super Race மனித இனத்தை உருவாக்க அவர் விரும்பினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் தூய ஆரிய இன சந்ததியினரை உருவாக்கி, மனித இனத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விபரீத எண்ணம், 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.
ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சில கிராமங்களில் இது ரகசியமாக பரிசோதித்தும் பார்க்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதே பாணியில் நவீன அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி எப்ஸ்டீன் தனது விருப்பத்தை மெய்ப்பிக்க முடியும் என்று நம்பியுள்ளார்.
தனது இந்தத் திட்டங்களுக்கு ஒரு அறிவியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.
மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
தான் இறந்த பிறகு தனது உடல், குறிப்பாகத் தலை மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை உறைநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர் பெற முடியும் என்றும் அவர் நம்பியுள்ளார் என்று தெரிய வருகிறது.
‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார். அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மன அழுத்தம் மற்றும் ‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
முதன் முறையாக குளோனிங் முறையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த 2 ஆய்வு கட்டுரைகள் அறிவியல் இதழில் வெளியாகி உள்ளன.
‘குளோனிங்’ குரங்குகள் ஷாங்காயில் உள்ள சீன அறிவியல் அகாடமியில் நரம்பியல் அறிவியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்கள், காய்கறி- பழங்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இதேபோல் இந்தியாவிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை அறிமுகப்படுத்த தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது.
தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை மட்டும் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். பருத்தி உணவு பொருள் அல்ல என்பதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.
வடமாநிலங்களில் கடுகு மூலம் எடுக்கப்படும் எண்ணையையே அதிக அளவில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கடுகை உற்பத்தி செய்தால் எண்ணை தேவையை பெருமளவு பூர்த்தி செய்யலாம் என்பதால் மரபணு மாற்ற கடுகை உற்பத்தி செய்ய முயற்சிகள் நடக்கிறது.
இந்த கடுகை டெல்லி பல்கலைக்கழக மரபணு மாற்றல் மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த கடுகை விவசாயம் செய்தால் அதில், பூச்சி தாக்குதல்கள், நோய் தாக்குதல்கள் ஏற்படாது. அதை சமாளித்து வளரும் வகையில் மரபணு மாற்றம் செய்து விதை உரு வாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கடுகு தேனீக்கள், புழு பூச்சிகள் பேக்டீரியாக்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உயிரியல் முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் ஒரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள்.
மேலும் இந்த கடுகினால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். புற்றுநோய் உள்ளிட்டவற்றை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் துறை மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
ஆனால், சில கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட பகுதிகளில் இந்த கடுகுகளை பயிரிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், உயிரியல் பாதிப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, மரபணு மாற்ற கடுகுகளை அனுமதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுசம்பந்தமாக மரபணு மாற்ற தொழில்நுட்ப கமிட்டியின் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதில், மரபணு கடுகை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.
பரவலாக இல்லாமல் சில பகுதிகளில் மட்டும் இவற்றை பயிரிட்டு பரீட் சார்த்தமாக ஆய்வு செய்வது என்றும், அது நல்ல பலனை கொடுத்தால் அனைத்து இடங்களிலும் மரபணு மாற்ற கடுகு பயிரிட அனுமதிப்பது என்று முடிவு செய்ய இருக்கிறார்கள். #CentralGovernment






