என் மலர்
நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள் போராட்டம்"
- புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் 2023-ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் இந்த நெடுஞ்சாலையில் மாதந்தோறும் ரூ.11 கோடியை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணிக்காக வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றனர். இதனால் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.
எனவே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் மரங்கள் நட்டு பராமரித்து, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து உரிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சுங்கச்சாவடியில் 6 வாசல்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் 6 வாசல்களிலும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது. நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.
அதன்படி கார், ஜுப், வேன் உள்பட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95 என்பது ரூ.5 உயர்ந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மினி பஸ் உள்பட வானங்களுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.165 ஆகவும், பஸ் டிரக் உள்பட வாகனங்களுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.345 ஆகவும், எச்.சி.எம். வாகனங்களுக்கு ரூ.30 அதிகாரித்து ரூ.540 ஆகவும், ஓவர் சைஸ் வாகனங்களுக்கு ரூ.625-ல் இருந்த ரூ.30 உயர்ந்து ரூ.655 ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள 460 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்ல் அமுலுகு வந்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, சென்னை வானகரம், திண்டிவனம், சேலம் ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னை சமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர்டி, கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர, நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீ பெரும்புதூர், பள்ளிகொண்டா, பரனூர், பட்டறை பெரும்புதூர், புதுக்கோட்டை வாகைகுளம், எஸ்.வி.புரம். சாலை புதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, வாணயம்படி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சுங்கச்சவாடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை இந்த சுங்கசாவடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் கீரம்பூர்டி சுங்க சாவடியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள், மணல் லாரி, டேங்கர் லாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்க கட்டண உயர்வால் தொழில் மேலும் நலிவடையும் உள்ளது. இதனால் காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் விரைவில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
- கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.
உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.
இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு மையங்கள், அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்த பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகையை அரிசி ஆலை உரிமையாளர்கள் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் ஏற்ற வந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கொக்கலாடி பகுதியிலும் லாரிகளை மறித்து போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சேகர், துணை செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி பகுதியில் லாரி உரிமையாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






