என் மலர்
நீங்கள் தேடியது "சூர்யா விஜய் சேதுபதி"
- தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.
- விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள்.
முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அனல் அரசு இயக்கத்தில் உருவான 'பீனிக்ஸ்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த பட விழாவில், சூர்யா வாயில் 'சுவிங்கம்' மென்றபடி, ரசிகர்களுடன் கலந்துரையாடியது விமர்சனத்துக்குள்ளானது. 'முதல் படத்திலேயே பந்தா தேவையா...', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடிய விழாவில் இயக்குனர் அனல் அரசு பங்கேற்று பேசும்போது, 'பீனிக்ஸ்' படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, 'நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.
ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்து, யோசித்து செயல்பட்டால் நல்லது. (சூர்யாவை நோக்கி) தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்' என்றார்.
- பீனிக்ஸ் வீழான் திரைபடத்தின் டிரெய்லர், விமர்சனம், நட்சத்திரங்கள் மட்டும் OTT விவரங்கள்
- இப்படத்தை அனல் அரசு இயக்கியுள்ளார்.
கதைக்களம்
சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். அங்கு சம்பத்தின் மனைவி வரலட்சுமி சரத்குமார், தன் ஆதரவாளர்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா சேதுபதி தப்பித்து விடுகிறார். தொடர்ந்து அவரை கொல்ல முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது.
இறுதியில் சூர்யா சேதுபதி கொலை முயற்சியில் இருந்து தப்பித்தாரா? எம்.எல்.ஏ. சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சூர்யா சேதுபதி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் வசனம் இல்லாமல் உடல் மொழியாலும், கண் பார்வையாலும் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் பக்குவமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
எம்.எல்.ஏ, சம்பத், அவரது மனைவி வரலட்சுமி சரத்குமார் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். தாய் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார் தேவதர்ஷினி. மகனுக்காக ஏங்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். அபி நட்சத்திராவின் நடிப்பு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடியாளாக வரும் ரிஷி கவனிக்க வைத்து இருக்கிறார்.
இயக்கம்
பழிக்கு பழி வாங்கும் கதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அனைத்திலும் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி பிரமிக்க வைத்து இருக்கிறார்.
இசை
சாம்.சி.எஸ் இசையில் இந்தா வாங்கிக்கோ பாடல் டான்ஸ் ஆட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
தயாரிப்பு
AK Braveman Picturess நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
- விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
- சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இந்தா வாங்கிக்கோ என்ற குத்து பாடலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
We are happy to inform that TN Theatrical Rights of #Sindhubaadh has been acquired by @ClapBoardPr Sathyaamoorthi.
— VANSAN MOVIES (@VANSANMOVIES) May 28, 2019
Releasing Soon. Stay Surfed.
An #SuArunkumar Film
A @thisisysr Musical
Produced by @KProductionsInd - @VANSANMOVIES@VijaySethuOffl@yoursanjali@Rajarajan7215pic.twitter.com/WUXz4W9whY






