search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singapore President"

    • சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.
    • பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

    இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் நாளை (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள்.
    • தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.

    சென்னை:

    சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள். உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச்செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.

    ×