search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simbu Fans"

    கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    சிம்பு தனது ரசிகர்களிடம் ’இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இது சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ‘சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா, விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் விமர்சித்தார்கள். இதனால் கோபமான சிம்பு ‘என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்’ என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானது. இதுபற்றி பால் முகவர் சங்கத்தினர் கமி‌ஷனரிடம் புகார் கொடுக்கும் வரை சென்றது.

    தேனாம்பேட்டை குடிசை பகுதியை சேர்ந்த மதன் என்ற சிம்பு ரசிகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் வைரல் ஆனது. அந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று வந்த சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு உடைகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



    அப்போது ‘கட்அவுட் வைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையால் என் ரசிகர் பலியானதால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். அது எல்லோரையும் சென்று சேரவில்லை. சிலர் விமர்சித்ததற்கு பதிலடியாக எதிர்மறையாக சில வி‌ஷயங்கள் கூறினேன். அது எல்லோரையும் சென்று சேர்ந்து சர்ச்சையாகிவிட்டது.

    பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றி பேசவில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக பேசுகிறேன்.

    இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். வாய் இல்லாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றை மதிப்பவன் நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    கேலி, கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதுவரை செய்யாத அளவில், ‘என் கட்அவுட் வைத்து, அண்டாவில் பால் ஊற்றுங்கள்’ என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    இந்த படம் பற்றி சிம்பு கடந்த வாரம் ஒரு வீடியோவில் பேசியதாவது:-

    பட வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று கூறி இருந்தார்.

    இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இருப்பதே ஒன்று, இரண்டு ரசிகர்கள் தான், இதற்கே இப்படியா என்று கேலி செய்தனர்.

    இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள். கட்அவுட், பேனர் எல்லாம் வைத்து பால் அபிஷேகம் எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன்.

    சிம்பு பேசிய வீடியோ:


    அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை என எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால் சந்தோ‌ஷப்படுவேன் எனச் சொல்லியிருந்தேன். இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள். எனக்கு இருக்கிறதே 2, 3 ரசிகர்கள் தான் என்கிறார்கள். நாம் ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும்.

    2, 3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும். எனவே அந்த 2, 3 ரசிகர்களுக்கு மட்டும் சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை. இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள்.

    இதைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். எனக்கு தான் 2, 3 ரசிகர்கள் தானே இருக்கிறார்கள். அதனால் இதை செய்வது தப்பு கிடையாது. அந்த அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப்போறது கிடையாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீசுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

    இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    ×