என் மலர்

  நீங்கள் தேடியது "security force vehicle"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்தனர். #MilitantsAttack
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.

  இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வாகனத்தில் இருந்த 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஹைடர்போரா பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் வீரர் படுகாயமடைந்தார். #CRPFjawanInjured
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள ஹைடர்போரா பகுதி வழியாக இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒரு வீரர் படுகாயமடைந்தார்.

  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் அதிகாரிகளும், வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #CRPFjawanInjured
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது பயங்ரவாதிகள் இன்று பிற்பகல் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட கானாபால் பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் வாகனங்களின் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வாகனங்களின் மீது பயங்ரவாதிகள் இன்று பிற்பகல் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். #Kashmirmilitants #grenadeattack
  ×