என் மலர்

  நீங்கள் தேடியது "Saratha college"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார்.
  • இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள்.

  நெல்லை:

  நெல்லை சாரதா மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை ஒமேகா மன்றம் சார்பில் 'இயற்பியலில் இன்றைய வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

  மதுரை விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் கணேசன் 'நானோ தொழில்நுட்பம் குறித்தும், மதுரை பாத்திமா கல்லூரி உதவி பேராசிரியர் ஷீலா விமாலா மருத்துவ இயற்பியல் பற்றியும், லண்டனில் உள்ள நியூட்டன் இன்டர்நேஷனல் பெல்லொவ் முனைவர் லோகு திருமலைசாமி, குறைமின் கடத்திகளில் எக்ஸ் கதிர்கள் தாக்கங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

  இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள். ஸ்ரீசாரதா கல்வி குழுமங்களின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வாழ்த்தி பேசினார். உதவி பேராசிரியை சவுபாக்கியவதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முத்துராணி மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் பாரத மாதா பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பேராசிரியர் பாலமுருகன் கலந்து கொண்டு பாரதமாதா உருவாகிய சூழல் குறித்து விளக்கினார்.

  நெல்லை:

  பாளை சாரதா மகளிர் கல்லூரியில் பாரத மாதா பூஜை நிகழ்ச்சி கல்லூரி வழிபாட்டு கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் பாலமுருகன் கலந்து கொண்டு பாரதமாதா உருவாகிய சூழல் குறித்து விளக்கினார். மேலும் தேச தலைவர்களின் தேசப்பற்றினை குறித்தும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

  நிகழ்ச்சியில் மனோன்மணியம் பல்கலை கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் வெங்கடேஷ், சாரதா கல்லூரி முதல்வர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் கல்வி இயக்குனர் சந்திரசேகரன், பாரத மாதா மந்திரங்கள் கூற பேராசிரியர்களும், மாணவிகளும், பாரதமாதாவிற்கு மலர் தூவி வழிபாடு செய்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாரதா கல்லூரியில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

  நெல்லை:

  நெல்லை அரியகுளம் சாரதா கல்லூரியில் செயலாளர் யதீஸ்வரி சரவணப்பிரியா அம்பா, இயக்குநர் சந்திரசேகரன் ஆகியோரின் அறிவுத்தலின்படி பொருளியல் துறையின் சார்பில் போட்டித்தேர்வுகளில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார்.

  சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பொருளியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், இந்த துறையில் பட்டம் பெறுவதால் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி பேசினார்.

  முன்னதாக 3-ம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்று பேசினார். பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 2-ம் ஆண்டு மாணவி சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • விழாவில் உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

  நெல்லை:

  நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

  திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமிஜி தலைமை தாங்கினார். திருப்பராய்த்துறை, ராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அபேதானந்தா சுவாமி, கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா பள்ளி செயலர் யதீஸ்வரி தவப்ரியா அம்பா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குநர் சந்திரசேகரன் விழாவின் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையினை வழங்கினார்.

  தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான திருப்பராய்த்துறை ராம கிருஷ்ண தபோவனத்தின் பொதுக்குழு உறுப்பினரு மான சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

  விழாவில் திருப்பராய்த்துறை, ஸ்ரீராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அேபதானந்தா சுவாமி, செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமி, சிறப்பு விருந்தினர் சண்முகம் ஆகியோர் 592 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.

  அனைத்து துறைத்தலைவர்கள், பட்டதாரிகளின் வகுப்பு பொறுப்பாசிரியர்கள், பட்டதாரிகளின் பெற் றோர்கள், உறவினர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

  முதுநிலை கணினி பயன்பாட்டி யல்துறை உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

  விழாவி னை மாணவிகள் பேரவை தலைவியும், கணினி பயன்பாட்டி யல் துறைத் தலைவருமான அனுஷா தொகுத்து வழங்கினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாரதா மகளிர் கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடுகள் 3 நாட்கள் நடைபெற்றது.
  • கல்லூரியின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வளர்ச்சி சங்கம் சார்பாக தொழில்நுட்ப உரை நடைபெற்றது.

  நெல்லை:

  நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடுகள் 3 நாட்கள் நடைபெற்றது. சக்தி பூஜையின் நிறைவாக 1-ந்தேதி சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சரஸ்வதி பூஜையின் மகிமை பற்றி கல்லூரியின் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப் பேராசிரியர் சங்கீதா சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

  அகிம்சை தினம்

  தொடர்ந்து சாரதா மகளிர் கல்லூரியில் உலக அகிம்சை தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுடன் பல்வேறு துறை சார்ந்த 10 மாணவிகள் காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் காந்தியடிகளின் கோட்பாடுகள் பற்றி உரையாற்றினார். பொருளியல் துறை துணை பேராசிரியை சண்முகபிரியா காந்திய பொருளாதார சிந்தனைகள் என்ற தலைப்பிலும், இயற்பியல் துறை துணைப் பேராசிரியை பூமாதேவி காந்திய கோட்பாடு மற்றும் நடைமுறை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். சாரதா மகளிர் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் மேஜர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். இயற்பியல் துறை துணை பேராசிரியை நிரஞ்சனா தேவி நன்றி கூறினார்.

  சாரதா மகளிர் கல்லூரியின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வளர்ச்சி சங்கம் சார்பாக தொழில்நுட்ப உரை நடைபெற்றது. கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். மேலும் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சோகோ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் கார்த்திக், இணைய பாதுகாப்பு பற்றி உரையாற்றினார். மேலும் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகர் மகிழ்வுரையாற்றினார். மேலும் கணினி பயன்பாட்டு துறை முனைவர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

  ×