என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சாரதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    சாரதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமிஜி தலைமை தாங்கினார். திருப்பராய்த்துறை, ராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அபேதானந்தா சுவாமி, கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா பள்ளி செயலர் யதீஸ்வரி தவப்ரியா அம்பா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குநர் சந்திரசேகரன் விழாவின் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையினை வழங்கினார்.

    தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான திருப்பராய்த்துறை ராம கிருஷ்ண தபோவனத்தின் பொதுக்குழு உறுப்பினரு மான சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    விழாவில் திருப்பராய்த்துறை, ஸ்ரீராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அேபதானந்தா சுவாமி, செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமி, சிறப்பு விருந்தினர் சண்முகம் ஆகியோர் 592 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.

    அனைத்து துறைத்தலைவர்கள், பட்டதாரிகளின் வகுப்பு பொறுப்பாசிரியர்கள், பட்டதாரிகளின் பெற் றோர்கள், உறவினர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    முதுநிலை கணினி பயன்பாட்டி யல்துறை உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

    விழாவி னை மாணவிகள் பேரவை தலைவியும், கணினி பயன்பாட்டி யல் துறைத் தலைவருமான அனுஷா தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×